கொழும்பில் ஒரு தடுப்பூசியும் பெறாதவர்கள் 20,000 பேர் உள்ளதாக தெரிவிப்பு!

கொழும்பில் ஒரு கோவிட் தடுப்பூசியையாவது பெறாத சுமார்  20000 பேர் உலா வருவதாக சுகாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன…..

இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவதானம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது…..

© சமயம் தொடர்பான கொள்கைகள்
© தடுப்பூசி ஏற்று கொள்வதில் அச்சம்
© தமக்கு விரும்பிய தடுப்பூசி வரும்வரை காத்திருத்தல்

போன்ற விடயங்கள் இதற்கு காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….

கொழும்பு நகரில் எந்த ஒரு தடுப்பூசியும் ஏற்றப்படாதவர்களின் நலன் கருதி நடமாடும் தடுப்பூசிப் பிரிவு நகரை வலம் வருவதாகவும் இவற்றில் தமக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *