இலங்கையில் மடக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துகிறது SAMSUNG

• உலகின் முதலாவது தண்ணீர் உட்புகாத பாதுகாப்பான மடிக்கக்கூடிய சாதனங்களை Samsung கொண்டு வருகின்றது.
• Galaxy Z Fold3 5G இன் அனைத்து S Penகளும் வாடிக்கையார்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
• உலகின் முதலாவது மின் நுகர்வு மற்றும் பொருளாதார நட்புரீதியான டிஸ்பிளேயையும் கொண்டுள்ளது

இலங்கையின் நம்பர் 1 ஸ்மார்ட் போன் வர்த்தக நாமமான Samsung நிறுவனம், தமது பலம் வாய்ந்த மற்றும் பிரீமியம் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களான Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவுகளை செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்றாம் தலைமுறை Samsung மடிக்கக்கூடிய சாதனங்கள் நீண்டதுடன் அவை வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் பெரிய திரை அனுபவத்தை வழங்கும் என்பதுடன் Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G என்பன வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்ய, அதன் வாயிலாக பலவற்றை பார்க்க மற்றும் விளையாடுவதற்கான அனுபவங்களை தரும்.

உற்பத்தித்திறன் மற்றும் அதிவேக பொழுதுபோக்கிற்கான சாதனத்தை விரும்புகின்றவர்களுக்கு Galaxy Z Fold3 சிறந்ததாக அமையும். உலகின் முதல் under Display கெமராவை கொண்ட மடிக்கக்கூடிய சாதனம் இதுவாகும். இது தடையற்ற 7.6 அங்குல  இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மடிக்கக்கூடிய சாதனத்தில் முதல் S Pen ஒத்துழைப்பை வழங்கும். Galaxy Z Flip3 ஸ்டைல் மற்றும் செயற்பாட்டை விரும்புவோரை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கெமரா பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருவதால் பயணம் செல்லும்போது பயன்படுத்த இலகுவாக இருக்கும். 

‘திறந்த சுற்றுச்சூழல் பின்னணியை ஏற்படுத்தி, அதில் புதுமைகளை படைத்துள்ளமையால் அதிகமான மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கடந்த வருடத்தில் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பது அதிகரித்து விட்டது. எமது வாழ்க்கை வடிவமைப்பும் மாற்றமடைந்துள்ளதுடன் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் நாளாந்தம் மாறுகின்றது. முதலாவது under டிப்பிளே கெமரா மற்றும் S Pen போன்றன மடிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது தண்ணீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என இலங்;கையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெவின் சுங் சூ யூ தெரிவித்துள்ளார்.

Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G தண்ணீர் புகாதபடி தயாரிக்கப்பட்டுள்ளதுடன் பலமான அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உறுதியாக இருக்கம். இதிலுள்ள கண்ணாடியும் சிறந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் சுரண்டல்கள் ஏற்படாது என்பதுடன் தவறுதாக கீழே விழுந்தாலும் அது உடைவதற்கான சாத்தியம் குறைவாகும். இது இதற்கு முன்னைய படைப்புக்களை பார்க்கிலும் 80% பாதுகாப்பு கொண்டது.

Galaxy Z Fold3 5G சிறந்த உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு சாதனம்
Galaxy Z Fold3 5G தடையற்ற 7.6 இன்ச் இன்ஃ Infinity Flex டிஸ்ப்ளே உள்ளது. மெயின் மற்றும் கவர் ஸ்கிரீன்கள் இரண்டிலும் – மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் விரைவான சாதன தொடர்புகளுக்கு உதவுகிறது. S Pen செயல்பாடு எளிதாக உள்ளது. மேலும் பெரிய திரை பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் பல செயலிகளை அணுகும் வாய்ப்பை அளிக்கிறது.
Galaxy Z Flip3 5G : அழகானது, செயற்பாடு கொண்டது.

Galaxy Z Flip3 5G நான்கு மடங்கு பொரிய கவர் ஸ்கிரீனை கொண்டுள்ளதால் தொலைபேசியை திறக்காமல் அதற்கு வருகின்ற அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பார்ப்பதற்கு எளிதாகின்றது. எமது கெமரா சிறப்பம்சங்கள் பலவற்றை கொண்டுள்ளது. இலகுவாக செல்பி படங்களை எடுக்க முடிகின்றது.

தனித்துவமான மடிக்கக்கூடிய அனுபவத்தை தமது வாடிக்கையார்களுக்கு வழங்குவதில்  அணுகுவதில் Samsung உறுதியாக உள்ளது.
Galaxy Fold3 5G (12+256GB) Phantom Black and Phantom Green
Galaxy Flip3 5G (8+256GB)  Cream, Green, Lavender and Phantom Black
அறிமுக சலுகை 
Galaxy Fold3 5G முன்பதிவு செய்து கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள்  இலவச UV Sterilizer (ரூ.9,999), Wireless Charger Trio (ரூ.17,999), Smart Keyboard  Trio (ரூ.8,999) மற்றும் Galaxy SmartTag  (ரூ.5,599) Galaxy Z Flip3 5G, முன்பதிவு செய்வதால், இலவச UV Sterilizer (ரூ.9,999), Wireless Charger Duo  (ரூ.9,199) மற்றும் Galaxy Smart Tag (ரூ.5,599) பெற தகுதியுடையவர்கள். இது தவிர, நுகர்வோர் 1 வருட Samsung Care Pack (ரூ.22,999 மதிப்புள்ள) ஸ்கிரின் மாற்றத்தை இலவசமாக இரண்டு தயாரிப்;புக்களுக்கும் பெற தகுதியுடையவர்கள்.  
கிடைக்கும் இடமும் விற்பனையும் 
Z Fold3 5G  மற்றும் Galaxy Z Flip3 5G முன்பதிவு செய்து கொள்வதற்கு இலங்கை வாடிக்கையாளர்கள் நாடு முழுவதுமுள்ள ஜோன் கீல்ஸ் ஒபிஸ் ஒட்டோமேஷன் மற்றும் சொஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்டிபியூசன், சொஃப்ட்லொஜிக் ரிட்டைல், சிங்கர், சிங்ஹகிரி, தம்ரோ மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் மற்றும் மொபிடெல் உட்பட சம்சுங் ஈ-ஸ்டோர், MySoftlogic.lk மற்றும் Daraz.lk, கீல்ஸ் சுப்பர் மற்றும் Kapruka.com ஆகிய இடங்களில் 2021 செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 வரை முன்பதிவு செய்யலாம்.

நீங்கள் எங்கு, எப்போது இருந்தாலும் உங்களுக்கு சேவை வழங்க நாம் தயார்.  Samsung Galaxy ஸ்மார்ட் போன் ஒன்றை கொள்வனவு செய்ய தீர்மானிக்;கும் உங்களுக்கு என்;றுமே மனதில் அமைதி நிலவும். Samsung Members app ஊடாக உங்கள் கையடக்க தொலைபேசியின் செயற்திறனை அதிகரிக்க இலகு என்பதுடன் உங்களுக்கு மேலும் உதவி தேவைப்படும் பட்சத்தில் எமது ஹொட்லைன் சேவை ஊடாக உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பும் கிடைக்கும்.   

‘அதிக அன்பிற்குரிய இலக்ரோனிக்ஸ் வர்த்தகநாமம்’ என்ற பெயரை பினான்ஸ் லங்கா மேற்கொண்ட ஆய்விக்கமைய  சம்சுங் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வென்றெடுத்தது. இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான சம்சுங், இலங்கையின் அனைத்து வயதுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் மனங்கவர் தொலைபேசியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *