தலிபான்களுக்கு சவால் விடும் ஆப்கான் பெண்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கண்டிப்பான புதிய மாணவர்கள் உடை தொடர்பில் பெண் ஒருவர் இணையம் ஊடாக கடும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதற்கு பெரும் ஆதரவு குவிந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் கலாச்சாரம், எனது உடைகள் மீது கை வைக்காதே போன்ற வசனங்களை குறிப்பிட்டு, பாரம்பரிய உடையுடன் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பாரம்பரியம் என்ன என்பது கூட தெரியாதவர்கள் தாலிபான்கள் என குறிப்பிட்டுள்ள குறித்த பெண்மணி, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடைகளையே பெரும்பாலும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி கூடங்களில் பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 20 ஆண்டுகளில் கால்சட்டை ஜீன்ஸ் மூலம் மாற்றப்பட்டிருக்கலாம். கழுத்துத்துண்டு தோள்களுக்கு பதிலாக தலையில் போடப்படுகிறது என்பதே ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்.

தாலிபான்களுக்கு ஆதரவாக வார இறுதி நாளில் ஊரவலம் சென்றவர்கள் கண்டிப்பாக ஆப்கன் பெண்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அல்ல எனவும் Dr Bahar Jalali அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட ஆப்கன் பாரம்பரிய உடையுடன் கூடிய புகைப்படத்தை வெளிநாட்டு வாழ் ஆப்கன் பெண்கள் பெருவாரியாக பகிர்ந்து வருவதுடன், தங்கள் பங்கிற்கு புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றனர்.

தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானின் அடையாளம் மற்றும் இறையாண்மை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்றார் Dr Bahar Jalali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *