சீனாவில் மீண்டும் கொரோனா கொத்தனி!

சீனாவில் டெல்டா பரவல்  காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவில் தென்கிழக்கு Fujian,  மாகாணத்தில்  59 பேருக்கு  புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக   இன்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் உ;ள்ளிட்ட முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம்  102 சமூகதொற்றாளர்கள் அடையாங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை டெல்டா  பரவல் காரணமாக சீனாவின் Xiamen நகரில்  பாடசாலைகள்  திரையரங்குகள் உடற்பயிற்சி நிலையங்கள்  மதுபானசாலைகள்  என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த  பகுதியில் உள்ளவர்கள்  அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறும்   சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

எவ்வாறாயினும்  டெல்டா  பரவல் காரணமாக சீனாவில்  புதிதாக உயிரிழப்புக்கள் பதிவு  செய்யப்படவில்லை என  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *