நியூசிலாந்தில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பயங்கரவாதி யார்?

நியூசிலாந்தில் சூப்பர் மார்கெட்டில் இலங்கையர் நடத்திய கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தின் North Island மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நியூ லின் பகுதியில் உள்ள Countdown சூப்பர் மார்க்கெட்டில், வாளுடன் நுழைந்த 32 வயதக்கும் இலங்கையர் ஒருவர், அங்கிருந்த 6 பேரை சரமாரியாக வெட்டினார்.

அதில் மூன்று பேருக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டத்தில் உயிருக்கு போராடிவருகினற்னர்.

தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அவரை கட்டுப்படுத்த முயற்சித்து முடியாததால், அவரை அங்கேயே சுட்டு கொன்றனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து, அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் செய்தித் தொடர்பாளர்களுடன் பேசிய போது, இந்த தாக்குதலை நடத்தியவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், இவர் 10 ஆண்டுகளாக நியூசிலாந்தில் இருந்து வருகிறார்.

மேலும், அவர் ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்தின் ‘பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில்’ அவரது பெயர் சேர்க்கப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பொலிஸாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அடக்குமுறை உத்தரவுகள் காரணமாக, அந்த நபரின் அடையாளம் (படம்) மற்றும் கடந்த காலத்தைப் பற்றி இன்னும் வெளிப்படுத்த முடியாத தகவல்கள் இருப்பதாக பிரதமர் கூறுயுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *