பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பு!

பிரித்தானிய இளவரசருக்கு பல பெண்களுடன் மிக நெருங்கிய நட்பு: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

மறைந்த பிரித்தானிய இளவரசரும், பிரித்தானிய மகாராணியாரின் கணவருமான இளவரசர் பிலிப்புக்கு பல பெண் தோழியருடன் மிக நெருக்கமான நட்பு இருந்ததாக ராஜ குடும்ப நிபுணர் அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ குடும்ப நிபுணரான Robert Jobson, தான் இளவரசர் பிலிப்பைக் குறித்து எழுதியுள்ள புத்தகம் ஒன்று தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Prince Philip’s Century: The Extraordinary Life of the Duke of Edinburgh என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த புத்தகம் குறித்து பேசிய Jobson, இளவரசருக்கும் பெண்களுக்கும் உள்ள நட்பு குறித்து தகவல்கள் சேகரிக்கும்போது, ஒரு பெண், தானும் இளவரசரும் மிக நெருக்கமாக பழகியதாகவும், தன்னையும் இளவரசரையும் கண்டவர்கள், தாங்கள் இருவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டதாக சந்தேகித்ததாகவும், ஆனால், அப்படி ஒன்றும் தங்களுக்கிடையே நடக்கவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பென்னியின் கணவர் மூன்று குழந்தைகளுடன் ஒரு நாள் அவரை விட்டு விட்டுஃபேஷன் டிசைனர் ஒருவருடன் ஓட, அவரது மகன் போதைக்கு அடிமையாக, இளவரசர் பிலிப்பின் பரிவும் பாசமும் பென்னிக்கு கிடைத்துள்ளது.

மற்றபடி, இளவரசருக்கும், பென்னி என்னும் Penelope Eastwood என்ற பெண்ணுக்கு இருந்த நட்பு அரண்மனை வட்டாரம் மட்டுமல்ல, மகாராணியாரும் அறிந்ததே!

இப்படியே அவர்களுக்கிடையிலான நட்பு கடைசி வரை தொடர்ந்த நிலையில், பிலிப் தன் கடைசி நாட்களை செலவிட்ட Sandringham எஸ்டேட் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ராஜ குடும்ப உறுப்பினரல்லாத வெகு சிலரில் பென்னியும் ஒருவர்.

அத்துடன், பிலிப் இறந்தபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் கூட கொரோனாவைக் காரணம் காட்டி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், பென்னி மட்டும் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.

தன் பெண் தோழியரில், பென்னியுடன் தான் இளவரசர் பிலிப் நீண்ட கால நெருங்கிய நட்பு வைத்திருந்தார் என்கிறார் Jobson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *