ஆசியாவிலேயே பெரிய பழமையான யானை சிலை!

கங்கைகொண்டசோழபுரம் அருகே 4 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இளையபெருமாள் நல்லூர் என்ற சிற்றூரில் இந்த யானை சிலை உள்ளது. சலுப்பை அழகர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 – 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உயரம் உடைய ஆசியாவிலேயே பெரிய யானைச் சிலையாகும்.

இச்சிலை வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு ஆகிய கலவையினால் சுட்ட செங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. யானை சிலையின் கழுத்து, உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சலுப்பை அழகர் கோயிலின் அருகில் பலா தோப்பில் பலா பழத்தைத் திருடிய திருடனைப் பிடிக்க கோயிலில் இருந்த நாய் ஒன்று துரத்தியுள்ளது. அந்நேரத்தில் அந்தத் திருடனை யானை ஒன்று மடக்கிப் பிடித்துள்ளது. ஆகையால், அதைக் குறிக்கும் வகையில் யானையின் துதிக்கையில் பலா பழத்துடன் மனிதன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது என்று இச்சிலைக் குறித்து இப்பகுதி மக்கள் கதையாக சொல்லி வருகின்றனர்.

சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.

உயர்ந்து நிற்கும் இந்த யானை சிலை அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *