கொவிட் தொற்றால் மரணித்தோரின் உடல்களை விரைவாக தகனம் செய்யுமாறு ஆலோசனை!

▪️ராகமை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களது சடலங்களை விரைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

▪️மரணித்தோரின் உறவினர்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

▪️இந்த விடயம் குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

▪️ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள 26 சடலங்களை மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள மயானங்களில் தகனம் செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

▪️நாட்டில் இதுவரையில் 5 ஆயிரத்து 17 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர்.

▪️கடந்த 2 நாட்களில் மாத்திரம் 196 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *