கொரோனா பேராபத்திற்கு முகம் கொடுத்துள்ள பிரித்தானியா!

பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் மூலம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும், பிரித்தானியர்கள் காய்ச்சல் போன்ற பல பருவகால வைரஸ்களைப் போல கொரோனா வைரஸுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கோவிட் வைரஸ் தொற்றுகள் குறைந்துவிட்டன, எனினும், விஞ்ஞானிகள் வருடாந்திர உயிரிழப்பு எண்ணிக்கை சில நேரம் ஆயிரக்கணக்கை எட்டும் என்று எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆடம் ஃபின் கருத்து வெளியிடுகையில், “நாங்கள் கோவிட் பிரச்சனைகளை நீண்ட காலமாக பார்க்க போகிறோம்.

“இன்ஃப்ளூயன்ஸா வைரஸைப் போல் இல்லை என்றாலும், இந்த வைரஸ் நாம் எதிர்பார்த்ததை விட மரபணு ரீதியாக மிகவும் வேகமானது என்று காட்டியுள்ளது.

ஆகவே, கோவிட் சில காலமாக ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாக நான் கருதுகிறேன், வருடாந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரங்களை எட்டும். ” என கூறியுள்ளார்.

ஒக்ஸ்போர்டில் உள்ள ரோசாலிண்ட் பிராங்க்ளின் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித் கருத்து வெளியிடுகையில், “காய்ச்சல் போன்ற “நோயின் அலைகள்” இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

எவ்வாறாயினும், பால் நோய் எதிர்ப்பு சக்தி விரிவடைவதால் காலப்போக்கில் கோவிட் உயிரழப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜொனதன் போல் கணித்துள்ளார்.

விஞ்ஞானி ஆயிரக்கணக்கான இறப்புகளின் எச்சரிக்கையை “அதிக அவநம்பிக்கை” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, எதிர்கால கோவிட் மாறுபாடு மூன்றில் ஒருவரை கொல்லக்கூடிய “யதார்த்தமான சாத்தியம்” இருப்பதாக ஏற்கனவே அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு கூறியுள்ளது.

அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், 35 வீத இறப்பு விகிதம் கொண்ட MERS போன்ற எதிர்கால கோவிட் திரிபு ஏற்படலாம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 24,470 பேர் பாதிக்கப்பட்டதோடு 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,230,749 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 869 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,520,199 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *