வீட்டில் மரணிப்பவர்களுக்கு இனி PCR அவசியம் இல்லை?

வீட்டில் மரணிக்கும் நபர்கள் மீது கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் சடலங்களை விடுவிக்க கொரோனர்கள் மற்றும் கிராம சேவகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் விளைவாக சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக அதன் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இதன்படி முன்பு வீடுகளில் இறந்தவர்களின் உடல்களை விடுவிப்பதற்கு முன்னர் பகுதி சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய முடிவின் காரணமாக வீட்டிலேயே இறக்கும் கொரோனா தொற்றாளர்களினால் சமூகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி ,தங்கள் வீடுகளில் இறக்கும் நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்க்ள் தனிமைப்படுத்தப்பட்டலாம் , புதிய முறைமையின் காரணமாக கொரோனா பரவலடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ,இதற்கு முன் வீடுகளில் ஏற்பட்ட இறப்புகளில் பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியமை உறுதிபடுத்தப்பட்ட போதிலும், இனி வரும் காலங்களில் கொரோனா மரணங்களை அடையாளம் காண்பது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *