கொழும்பு அரசியலில் ஏற்பட உள்ள அதிரடி மாற்றங்கள் பின்புறத்தில் ரணில் மஹிந்த கூட்டணி!

இலங்கை அரசியல் மட்டத்தில் அடுத்து வாரங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப் போவதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

திறமையாக செயற்படாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

திறமையின்மைக்கு அப்பால் சில அமைச்சர்கள் ஊழல் மற்றும் தவறான நடத்தை குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய பசில் ராஜபகஷ நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் பசில் அமைச்சரானதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு நிவாரணம் வழங்குவது குறித்த திட்டங்களை வகுப்பதே முக்கியமான பணியாக அமையும் என சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீண்ட இழுபறிக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் மட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. இதனையடுத்து அரசாங்க மட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சுமுகமான இணக்கப்பாடுகள் சில எட்டப்பட்ட பின்னணிலேயே ரணில் நாடாளுமன்றம் வந்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்ய சில நாட்களுக்கு முன்னர் பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *