சீனாவுக்கு எதிரான உலக அணியால் இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய சவால்!

இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பிரதான சவால் குறித்து முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தான் கூறும் விடயங்களை புரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சில காலம் செல்லும் எனவும் பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சீனாவுக்கு எதிராக உலகில் பல பிராந்தியங்களை சேர்ந்த நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள அணி இருக்கின்றது. இது குறித்து தற்போதைய அரசாங்கம் மாத்திரமல்ல, கடந்த அரசாங்கமும் மறந்து போனதன் பாரதூரமான பிரதிபலனை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும்.

எமது அண்டை நாடான இந்தியா, சீனாவுக்கு அருகில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய நாளில் இருந்து சீனா சம்பந்தமான இலங்கை எச்சரிக்கை விடுத்து வந்தன.

மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளால் இலங்கை மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்ற செய்தி அந்த எச்சரிக்கை ஊடாக வழங்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக நீக்கவும் இலங்கைக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் தொடர்பாக மீளாய்வு ஐரோப்பிய ஆணைக்குழுவை கோரும் யோசனை ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்நாடுகள் விடுத்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாததன் பிரதிபலனே இதற்கு காரணம் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *