தடுப்பூசி போடாதவர்களின் சிம்காட் இணைப்பு முடக்கப்படும்!

பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்று பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் பாகிஸ்தானில் இதுவரை 95,59,910 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.2 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ்  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

இதற்கிடையில் பாகிஸ்தானில் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வர தயக்கம் காட்டுகின்றனர். 

இதனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்ளாதவர்களின் சிம் கார்டுகள் முடக்கும் முடிவை அந்த மாகாண அரசு எடுத்துள்ளது. இந்த மாகாணத்தில் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதே சமயத்தில் இதற்கு பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாததும் காரணம் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *