ஜோர்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த பெண்ணுக்கு விருது!

அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி ஜோர்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை டெர்ரக் சவுவின் என்ற பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜோர்ஜ் ஃபிளாய்ட் பரிதாபமாக மரணமடைந்தார். இதுகுறித்த வீடியோ உலக அளவில் வைரலானதை அடுத்து அமெரிக்க அரசு பொலிஸ் அதிகாரி டெர்ரக் சவுவின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் கழுத்தில் ஷூ காலால் மிதிக்கும்போது 18 வயது இளம்பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ தான் உலகம் முழுவதும் வைரலானது என்பதும் இதுகுறித்த வழக்கில் இந்த வீடியோ முக்கிய சாட்சியாக ஏற்று கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதனை வீடியோ எடுத்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் என்பவருக்கு உலகின் மிகப்பெரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *