மறந்த மருத்துவம் “சொடக்கு தக்காளி”

நமக்கு அருகில் இருக்கும்போது சில பொருட்களின் அருமையும் பெருமையும் தெரியாது. அப்படி நாம் கவனிக்கத்தவறிய ஒரு அரிய மூலிகை தாவரம் தான் இந்த சொடக்குத் தக்காளி.

முன்பெல்லாம், கிராமப்புறங்களின் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளின் அருகாமையிலோ வயல்வெளிகளிலோ அதிகம் காய்த்து குலுங்கி கொண்டிருக்கும் இந்த சொடக்குத் தக்காளி. ஆனால், இன்றோ இதை காண்பதே அரிதாகிவிட்டது.

நம் கிராமங்களில் இருந்த இந்த அரிய மூலிகையை நாம் பாதுகாக்க தவறவிட்டாலும் பல வெளிநாடுகளில் இந்த சொடக்குத் தக்காளியை ஆயிரங்களில் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அப்படி வெளிநாடுகள் வரை பிரபலம் ஆகும் அளவுக்கு இந்த சொடக்குத் தக்காளியில் என்னதான் நன்மைகள் இருக்கு என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காத இந்த சொடக்கு தக்காளியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து சரும கட்டியின் மேல் பத்து போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீங்கிவிடும்.

இந்தச் சொடக்குத் தக்காளி செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படும் வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது என்றும் சில மருத்துவ குறிப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் சாப்பிடும் அதிக உணவுகள் கூட ஜீரணம் ஆகவேண்டுமென்றால் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை எளிதாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *