கடலின் நடுவில் நிர்மாணிக்கப்படவுள்ள பிரமாண்டமான ஹோட்டல்!

கத்தார் நாட்டில் தற்போது ஒரு புதிய சொகுசு ஹோட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. அது கடலின் நடுவில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, துருக்கிய கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனமான ஹெய்ரி அட்டக் கட்டடக்கலை, சமீபத்தில் ஹோட்டலின் அம்சங்களை பற்றிய விவரங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.
அதில், சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் மிதக்கும் சொகுசு ஹோட்டல் 2025க்குள் நிறைவடையும். எனவும் இந்த ஹோட்டலில் 152 அறைகள் உள்ளது.

அவை ஆற்றல் இழப்பைக் குறைப்பதற்கும் கழிவு உற்பத்தியைக் குறைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஹோட்டல் கத்தாருக்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஹெய்ரி அட்டக் கூறியுள்ளார்.

ஹோட்டலின் கட்டுமானம் மார்ச் 2020 இல் தொடங்கியது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அமைக்கப்படும் மிதக்கும் ஹோட்டல் 2025க்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் முக்கிய அம்சங்களில் ஒன்று தண்ணீருக்கு ஏற்ப சுழலும் திறன் என்பதால், இது மின்சார சக்தியை உருவாக்கி விருந்தினர்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *