இலங்கை அணிக்கு பந்து வீசிய முரளி இப்போது ராஜபக்சக்களுக்கு பந்து வீசுகின்றார்!

முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக விளையாடியபோது அவரது பந்து வீச்சை பார்த்து மகிழ்ந்தோம், பாராட்டினோம். ஆனால் இன்று ராஜபக்சக்களுக்கு சோரம்போகும் விதத்தில் அவர் பந்துவீசுகின்றார். முரளிக்கு 2 ஏக்கர் காணியை அரசு வழங்கியுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா, முரளிமீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

அத்துடன் இந்த அரசை விரட்டியடிப்போம். எமது பக்கம் பலமானதொரு அணி இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டளவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமையும் எனவும் சரத் பொன்சேகா சூளுரைத்தார்.
அமைச்சர் சரத் வீரசேகரமீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *