சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் “M” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன!

உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், டெல்லியில் விவசாயிகள் போராடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்படுவதை நேற்று விமர்சித்த ராகுல் காந்தி, பாலங்களை எழுப்புங்கள், சுவர்களை அல்ல என மத்திய அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துவந்த 250 பேரின் ட்விட்டர் கணக்குகள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுப்படி முடக்கப்பட்டது குறித்தும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் தனது டுவிட்டரில் தெரிவிக்கவில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *