45 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி படம்பிடித்த கணவனுக்கு மரண தண்டனை, மனைவிக்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்­தானில் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான யுவ­தி­யொ­ரு­வரை கடத்தி. வல்­லு­வுக்­குட்­ப­டுத்தி படம்­பி­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒரு தம்­ப­தி­யினர் குற்­ற­வா­ளிகள் என பாகிஸ்தான் நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­த­துடன், கண­வ­னுக்கு மரண தண்­ட­னையும் மனை­விக்கு ஆயுள் தண்­ட­னையும் விதித்­துள்­ளது.

இத்­தம்­ப­தி­யினர் 45 சிறு­மி­களை கடத்தி, பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

33 வய­தான காசிம் ஜஹாங்­கீ­ருக்கும் அவரின் மனை­வி­யான கிரன் மெஹ்மூத் எனும் 24 வய­தான யுவதி ஆகி­யோரே இத்­தண்­ட­னைகள் விதிக்­கப்­பட்ட தம்­ப­தி­யி­ன­ராவர். இவர்­க­ளுக்கு பெருந்­தொகை அப­ரா­தங்­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தின் ராவல் பிண்டி நக­ரி­லுள்ள, அல்­லாமா இக்பால் திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் விஞ்­ஞான முது­மாணி (எம்.எஸ்.சி) பட்­டப்­பி­டிப்பு மாணவி ஒருவர் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து இத்­தம்­ப­தி­யினர் கைது செய்­யபட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

மேற்­படி மாணவி கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ராவல்­பிண்டி பொலி­ஸா­ருக்கு செய்த முறைப்­பாட்டில், தான் பயிற்சிப் பட்­ட­றை­யொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக சென்­ற­போது ராவல்­பிண்டி கோர்டன் கல்­லூ­ரிக்கு வெளியில் வைத்து கடத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

கல்­லூரி வாயி­லுக்கு வெளியே தான் வந்­த­போது, முகக்­க­வசம் அணிந்த பெண்­ணொ­ருவர், தன்­னையும் ஒரு மாண­வி­யாக அறி­முகப்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கவும் அப்­பெண்­ணுடன் தான் நடந்து சென்­று­கொண்­டி­ருந்­போது அப்­பெண்ணின் கணவர் காரில் வந்­த­வுடன் அவர்கள் இரு­வரும் தன்னை காருக்குள் தள்ளி, குலிஸ்டன் கொல­னி­யி­லுள்ள அவர்­களின் வீட்­டுக்கு கொண்டு சென்­ற­தாக அம்­மா­ணவி முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

அவ்­வீட்டில் மேற்­படி ஆண் தன்னை பாலியல் வல்­லுறவுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அவரின் மனைவி இக்­குற்­றச்­செ­யலை வீடி­யோவில் பதிவு செய்­த­தா­கவும் அம்­மா­ணவி கூறி­யி­ருந்தார்.

இதை­ய­டுத்து காசிம் ஜஹாங்­கீரும். ஆவரின் மனைவி கிரன் மெஹ்­மூத்தும் கைது செய்­யப்­பட்­டனர்.
இது தொடர்­பான வழக்கு ராவல்­பிண்டி மாவட்ட நீதி­மன்­றத்தில் நடை­பெற்­றது. இவ்­வ­ழக்கை விசா­ரித்த நீதி­பதி ஜஹாங்கீர் அலி கோண்டால், மேற்­படி தம்­ப­திக்­கான தண்­ட­னையை கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்தார்.

இதன்­படி, கடத்தல், வல்­லு­றவு குற்­றங்­க­ளுக்­காக காசிம் ஜஹாங்­கீ­ருக்கு மரண தண்­ட­னையும் 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபா (சுமார் 6 இலட்சம் இலங்கை ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

அத்­துடன் பாதிக்­கப்­பட்ட மாண­விக்கு 10 இலட்சம் பாகிஸ்தான் (சுமார் 12 இலட்சம் இலங்கை ரூபா) இழப்­பீடு வழங்க வேண்டும் எனவும் தவ­றினால் 6 மாத சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் எனவும் நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் 2016 ஆம் ஆண்டின் இலத்­தி­ர­னியல் குற்­றத்­த­டுப்பு சட்­டத்தின் கீழும் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டார். அதனால் அவ­ருக்கு மேலும் 3 வருட சிறைத்­தண்­டை­னையும் 10 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

அதே­வேளை காசிம் ஜஹாரின் மனை­வி­யான கிரன் மெஹ்­மூத்­துக்கு மாண­வியை கடத்­தி­ய­மைக்­காக ஆயுள் சிறைத்­தண்­ட­னையும் 10 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. அத்­துடன் இலத்­தி­ர­னியல் குற்­றத்­த­டுப்பு சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு மேலும் 3 வருட சிறைத்­தண்­டை­னையும் 10 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், தக­வல்­தொ­ழில்­நுட்ப நிபு­ண­ரான குற்­றம்­சு­மத்­தப்­பட்ட நபர், 45 சிறு­மி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்தி, புகைப்படங்களையும் வீடியோ படங்களையும் பிடித்ததாக ஒப்புக்கொண்டார் என பாகிஸ் தானின் ‘டோன் பத்திரிகை’ தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடன பொலிஸார் தொடர்புகொண்ட போது, சமூக களங்கத்துக்கு அஞ்சி, வாக்குமூலம் பதிவு செய்ய முன்வரவில்லை எனவும் அந்த அதிகாரி கூறினார் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *