ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்!

பொதுவாக முட்டை என்பது எல்லோருக்கும் பிடித்த உணவு என்பதை தாண்டி ஆரோக்கியமான உணவாகும்.

நாம் முட்டையை பல வழிகளில் எடுத்துக் கொள்ள முடியும். அது குறித்து இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஆம்லெட், ஆஃப் பாயில், ஃபுல் பாயில், வேகவைத்த முட்டை என எளிதான வழிகளில் சத்தான உணவைப் பெற முடியும்.
ஒரு முட்டையில் சுமார் 200 மி.கி கொழுப்பு உள்ளது, என ஆராய்ச்சி கூறுகிறது. இந்த கொழுப்பு இரத்தத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன.

அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.உதவும். உங்கள் உணவில் முட்டைகளைச் சேர்ப்பது உங்களுக்கு புரதம், கோலின், வைட்டமின் ஆகியவற்றை வழங்கும் ஏ மற்றும் டி மற்றும் பயோட்டின் போன்ற விட்டமின்களையும் வழங்குகிறது.

முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

​எத்தனை?
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை வரை சாப்பிடலாம் என்ற கேள்வி நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 1-2 முட்டைகள் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவு போதுமானது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.

​பக்க விளைவுகள்
நீங்கள் எந்த உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உங்களுக்கு பக்க விளைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
முதலில் முட்டையில் அதிக புரதச்சத்து இருப்பதால் சிறுநீரகங்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் குறைவாக உள்ளன.
மேலும் சிலருக்கு முட்டையால் ஒவ்வாமை உண்டாக வாய்ப்புள்ளது. எனவே தகுந்த அளவு முட்டைகளை எடுப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *