மக்கள் திலகம் எப்படி புரட்சித் தலைவரானார்!

1972 அக்டோபர் 30-ம் நாள், லட்சக்கணக்கானோர் பங்கேற்க, கருணாநிதியின் அராஜகப் போக்கைக் கண்டித்து சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

பேரணி முடிவில், மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், அண்ணா தி.மு.க.வின் இரண்டாவது உறுப்பினரும், கழகத் தளபதியுமான கே.ஏ.கே. உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.

உரையின் இறுதியில், “நமது தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி கொடுத்த ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை உங்களின் (தொண்டர்கள்) அனுமதியோடு இந்த வங்கக்கடலில் தூக்கி எறிகிறோம். இன்று முதல் அவர் ‘புரட்சித் தலைவர்’ என்றே அழைக்கப்படுவார்” என்றார் கே.ஏ.கே.

கூடியிருந்த லட்சோப லட்சம் மக்கள் ‘புரட்சித் தலைவர்’ வாழ்க என்று வீர முழக்கமிட்டனர். அன்று முதல் எம்.ஜி.ஆருக்கு ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டம் நிலைத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *