பூதவுடல்களை குளிரூட்டிகளில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும்!
கொரொனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை குளிரூட்டிகளில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
கொரொனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது என கூறிய அவர் அரசு இந்த நேரத்தில் மத சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தகனம் செய்யும் முடிவை மாற்றக்கூடாது என கூறினார்.