மேல் மாகாணத்தில் இருந்து வெளியேற அனுமதி!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று (15) இரவு 12.00 மணியுடன் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.

தனிமைப்படுத்திய பகுதிகளில் தொடர்நதும் கொரோனா தொற்று அச்சறுத்தல் நிலவுவதன் காரணமாகவே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தோடு, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் கடந்த 11 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *