ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது!

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என லான்செட் மருத்துவ இதழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே வந்துள்ள இந்தப் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. தடுப்பு மருந்து கண்டறிவதில் வெவ்வேறு கட்டங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துவிட்டோம் என அறிவித்தது. ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பு மருந்து கொரோனாவை தடுக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். தனது மகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதித்துப் பார்த்ததாகவும் கூறினார்.
ஆனால், ரஷ்யா அவசர கதியில் மருந்தை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்து சிறந்த பாதுகாப்பை அளிப்பதாக லான்செட் மருத்துவ இதழ் அறிவித்துள்ளது. இதுகுறித்து லான்செட் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பூட்னிக்-வி மருந்து உடலில் ஆன்டிபாடிகளை அதிகரிப்பதாகவும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 76 பேரில் உடலில் 21 நாட்களுக்குள் நல்ல ஆன்டிபாடிக்கள் உருவாகியுள்ளன. 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் டி செல்கள் அதிகமாக உற்பத்தி அதிகமாகியுள்ளன. பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு 42 நாட்கள் வரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *