Local

நீதி அமைச்சராகிறார் அலிசப்ரி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் நீதி அமைச்சராக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், இளைஞர் விவகாரம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு நாமல் ராஜபக்சவுக்கும் , கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுப் பதவி பேராசிரியர் ஜீ.எல். பீரிசுக்கும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி சுபவேளையில் பதவியேற்கவுள்ளது. கண்டி தலதாமாளிகையிலுள்ள ‘மகுல் மடுவ’ எனும் மண்டபத்தில் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

சுற்றாடல், வனஜீவராசிகள் துறை அமைச்சராக உதய கம்மன்பிலவும், நிதி இராஜாங்க அமைச்சராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் தேசியப்பட்டியல் எம்.பியுமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் இம்முறை அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

நீதி கலாச்சார மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. அதேபோல் இறுதிநேரத்தில்கூட அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மாறக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading