சிங்கப்பூரில் உள்ள மஸ்ஜித் சுல்தான் பிரபலமான பள்ளிவாசல்!

தற்போதைய சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் சுல்தான் பகுதி ஒரு காலத்தில் Kampong Glam எனும் பகுதியாக அறியப்பட்டது.

1980 விமான பயன்பாட்டிற்கு முந்தைய காலங்களில் நீராவிக்கப்பல்கள் இஸ்லாமியர்கள் புரியும் புனித ஹஜ் யாத்திரைக்காக இயக்கப்பட்டது. இதன் பின்புலமையமாக செயல்பட்டது தான் Kampong Glam . இரண்டு வாரங்கள் பிடிக்கும் புனித ஹஜ் பயணத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் புனித யாத்திரைக்காக ஒதுக்கப்பட்டது. மஸ்கட் வீதி, கந்தஹர் வீதி, புஸ்ரா வீதி, ஹாஜி லேன் என கம்போங் ங்லாம் பகுதியில் அரபு வணிகர்களின் தாக்கம் இருந்தது. ஹஜ் பயணத்திற்கான முகவர்கள் அங்கே செயல்பட்டார்கள். Kampong Glam பகுதியில் 1970 காலம் புனித ஹஜ் பிராயணத்திற்கான முன்னேற்பாடுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை canvas படங்கள் மூலமாக புகழ்பெற்ற ஓவியர் Yip yew Chong தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன.

மஸ்ஜித் சுல்தான் சுற்றளவு பகுதியில் வடநாட்டு இந்தியர்கள் நடத்தும் துணி விற்பனை நிலையங்கள், அரபு உணவகங்களும், வாசனை திரவியங்கள், தமிழ் முஸ்லீம்களின் புராதான ஒன்றிரண்டு நிறுவனங்கள் என இன்றளவும் பலதரப்பட்ட இனங்கள் வாழும் பகுதியாக அறியப்படுகிறது. ஊரில் ஹஜ்க்கு செல்லும் யாத்ரீகர்கள் நாம் சிங்கப்பூரில் இருப்பது தெரிந்தால் வருசை முகம்மது யானை மார்க் பெல்ட் (பச்சை பெல்ட்) வாங்கிவரசொல்லுவார்கள். ஹாஜிகள் அணியும் இக்ராம் உடையுடன் யானைமார்க் பெல்டை அணிவது வழக்கம். ஊரில் பச்சை பெல்ட் வேட்டி அணிவதை அந்தகாலத்தைய கப்பல்காரர்களின் அடையாளமாக இருந்தது. அதில் இருந்து சுருட்டை ஸடைலாக புகைக்கும் இரண்டு மூன்று பெரியவர்களை என் உறவுமுறையில் கண்டதுண்டு. They are very proud of it . சூலியா தமிழ்முஸ்லீம்களின் வருசை முகம்மது கடை, ஐமால் கசூரா வாசனை திரவியக்கடை, இன்னும் சில நாணய பரிமாற்று வர்த்தக்கடைகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *