பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகள் போட்டி!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் எம்.பிக்கள் 208 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஒரு தடவையேனும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளனர்.முன்னாள் ஜனாதிபதிகள் இருவர், முன்னாள் பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகளின் இரு புதல்வர்கள் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிகளாவர் என்பதுடன், சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களாவர். ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமராவார்.அத்துடன், முன்னாள் பிரதமர்களான திமு ஜயரட்ன, ரட்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரின் புதல்வர்களும் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.8ஆவது நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பதவிவகித்த கரு ஜயசூரிய இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தேசியப்பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை.பிரதி சபாநாயகராக செயற்பட்ட திலங்க சுமதிபால ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.குழுக்களின் பிரதி தவிசாளராக செயற்பட்ட செல்வம் அடைக்காலநாதன் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார்.