Cinema

சினிமாவில் பல முறை ஏமாற்றப்பட்டுள்ளேன்!

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இதை ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். உயிர்மெய் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அதில் ஷகிலா பகிர்ந்துள்ள சில விஷயங்கள் பின் வருமாறு, ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சில்க் ஸ்மிதாவுடன் நடித்த அந்த சினிமாவின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

சினிமா என்னும் பிரம்மாண்ட உலகத்தில் என் எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அத்தனை நாள் யாராலும் அறியப்படாமல் கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன்.
சினிமாவின் டிக்ஷனரியில் ஷகீலா என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டுவிட்டது.இவ்வளவு பெரிய வெற்றியும் கவனமும் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் விரும்பியதைவிட வேகமாக வளர்ந்து வந்தேன் என்று சொல்லலாம்.
அந்த மகிழ்ச்சியை குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்.சினிமாவின் புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி அடைவதற்கு விரும்பினேன். நடிப்புலகில் நுழையும்போது எனக்கு பதினேழு வயது திகைந்திருந்தது.

நடிப்பில் விருப்பமிருந்தும் அதுவரை நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டு செல்லவில்லை; யாருடைய காலையும் பிடிக்கவில்லை; ஆனாலும் சினிமா உலகம் என்னைத் தேடி வந்தது. மற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏதுமில்லாமல் சினிமாவில் நுழைய முடிந்ததற்காக தெய்வத்துக்கு நான் நன்றி சொன்னேன்.
என்னுடைய மார்கெட் உச்சத்தில் இருந்த நேரம் என்னை ஒரு படம் நடிக்க வேண்டும் என்று அழைத்து சென்று காட்சிகளை படமாக்குவார்கள். ஆனால், ஒரே படம் என்று கூறி நிறைய காட்சிகளை படமாக்கி அவற்றை வேறு வேறு படங்களில் இணைத்து நான்கு, ஐந்து படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.
ஆனால், எனக்கு ஒரு படத்தில் நடித்தற்கான சம்பளம் தான் கொடுக்கப்படும். இப்படியெல்லாம் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை.என்று கூறியுள்ளார் ஷகிலா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading