வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய ஆவணங்களின்றி முறைக்கேடான முறையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் பலர் நாடு கடத்தப்படும் ஆபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியவங்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் அந்த நாடுகளில் வைத்திய மற்றும் வேறு நன்மைகளை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் பதிவு செய்துக் கொண்ட போதிலும் பின்னர் புதுப்பித்துக் கொள்ளவிலை என அவர் தெரிவித்துள்ளார்.

மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே வெளிவிவகார செயலாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *