ஆட்ட நிர்ணய சதி ஆதாரங்கள் இருப்பின் அவற்றினை வெளியிடுங்கள்!

உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கையணி ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் கோமாளித்தனங்களின் வெளிப்பாடு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த தகவல்கள் தேர்தல் காலத்திற்காக வெளியிடப்படும் சேர்க்கஸ் வித்தைகள் போன்ற கோமாளித்தனமான விடயங்களாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2011 உலககிண்ணப் இறுதிப் போட்டிகளில் இலங்கையணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக அக்காலப் பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜயவர்த்தன தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும் குறித்த ஆட்ட நிர்ணய சதி தொடர்பான ஆதாரங்கள் இருப்பின் உடனடியயாக அவற்றினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் மகேல ஜயவர்த்தன தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *