இலங்கை கிரிக்கெட் வீரர் சட்டவிரோத போதைப் பொருளுடன் கைது

இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சட்டவிரோத போதைப்
பொருள் வைத்திருந்ததாக பன்னல போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர் 2018 இல் இலங்கை அணிக்காக சில ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் 14 நாட்கள் விிளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளதாகவும்
போலீசார் உறுதிப்படுத்தினர்.
அவருடன் மற்றும் ஒரு 24 வயது நபரும் கைது செய்யப்பட்டார்.
குறிப்பிட்ட கிரிக்கட் வீரர் தொடர்பான மேலதிக விபரங்கள
வெளியாகவில்லை.
“இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது யுக முடிவு அல்ல, மறுவாழ்வு பெற பயிற்சி செய்ய வேண்டும்” என மூத்த காவல்துறை அதிகாரி கைது குறித்து கருத்து தெரிவித்தார்