இலங்கையில் 148 ஆண்டுகளுக்குப் பின்னர் Glossy ibis பறவை!

குளோசி இபிஸ் (Glossy ibis) எனப்படும் புலம்பெயர் பறவை 1870 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புந்தல தேசிய சரணாலயத்தில் குளோசி இபிஸ் பறவையை அதிகாரிகள் அவதானித்துள்ளன
அண்டை நாடுகளில் இருந்து இந்த பறவை வருவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
இது 148 வருடங்களின் பின்னர் இந்த இன பறவை இலங்கையில் விருத்தி அடைகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புந்தல தேசிய சரணாலயத்தில் ஒரு பகுதியில் குளோசி இபிஸ் (Glossy ibis) பறவை தனது 6 குஞ்சுகளுடன் கூடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த பறவையினம் இலங்கையில் விருத்தி அடைந்தமைக்கான சான்று பதிவாகியுள்ளது.
இன்று 1872 ஆம் ஆண்டு திஸ்ஸமகாராமய பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த பறவை 8 கூடுகளை கட்டியிருந்ததாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *