கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன.
இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் தனது பெயரை இணைத்துக் கொண்டுள்ளது.
இதற்கமைய, ஜேர்மனிய மருந்து நிறுவனமான பயோ என்டெக் தன்னார்வலர்களுக்கு புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது போல 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை உருவாக்க முடியுமெனின், நான் மகிழ்ச்சியடைவேன்.
ஆனால், இதற்கு சில வருடங்கள் ஆகலாம். ஏனெனில் நிச்சயமாக பின்னடைவுகள் ஏற்படக்கூடும். ஏனென்றால் சில தடுப்பூசிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

தடுப்பூசிகளின் வளர்ச்சி மருத்துவத்தில் மிகவும் சவாலான மற்றும் கடினமான பணிகளில் ஒன்றாகும்’ என கூறினார்.
இதேவேளை, ‘ஜேர்மனியில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் வீதம் தற்போது சராசரியாக 0.74 என மதிப்பிடப்பட்டுள்ளது’ எனவும் கூறினார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாமா என்று அதிகாரிகள் இந்த வீதத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *