அனைவரும் ஒன்றிணைந்து எழுச்சியுடன் செயற்பட்டாலே தவிர  இந்த யுத்தத்தை எம்மால் வெற்றி கொள்ளமுடியாது.

சாதி சமயம், குலபேதம், செல்வந்த, வறிய, உயர்வு, தாழ்வு நிலையை வைரஸ் பார்ப்பதில்லை.  வைரஸ் எவரது உடலிலும் உட்செல்லக்கூடியது என்பதுடன் அது எவரினதும் தவறினால் ஏற்பட்டதுமல்ல.
நினைவில் கொள்ளவும். இது இந்நாட்டில் வாழும் மக்களுக்கும் வைரசிற்கும் இடையேயான யுத்தமாகும்.
அனைவரும் ஒன்றிணைந்து எழுச்சியுடன் செயற்பட்டாலே தவிர  இந்த யுத்தத்தை எம்மால் வெற்றி கொள்ளமுடியாது.
இந்நோயால் பாதிப்புற்ற எமது சகோதரர்களையும் அவர்களைச் சூழவுள்ளோரையும் கௌரவமாகவும் பரிவுடனும் கவனிக்க வேண்டியது எமது சகலரினதும் கடமையாகும்.

நம் சகலரினதும் பாதுகாப்பிற்காக நோய் அறிகுறி தொடர்பில் அவதானம் செலுத்துவதும் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுவதும், நாம் நமக்கும், நமது நாட்டிற்கும் செய்யக்கூடிய புத்தி  சாதூர்யமான செயலாகும்.
இது பயப்படுவதற்கோ வெட்கப்படுவதற்கோ உரிய விடயமல்ல என்பதுடன் இது உங்களால் இலங்கையர்கள் நம் அனைவரிட்காகவும் செயற்படுத்தப்பட வேண்டிய பாரிய பொறுப்பாகும்.
நோய் அறிகுறிகளுடன் வைத்திய சாலை வரும் சகலரையும் பேதமின்றி கருணையுடன் அரவணைத்துக் காப்பதற்கு எமது சகல சேவைகளும் தயார் நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *