ஊரடங்கால் மாட்டிக்கொண்ட மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலம் துல்ஹின் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரத்புராவை சேர்ந்தவர் தீரஜ் குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்பி பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தீரஜின் மனைவி சில வேலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணால் மீண்டும் கணவனின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதற்கிடையில் தீரஜ் தனது மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வரச் சொல்லி போனில் கட்டாயப்படுத்தி உள்ளார்.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு மற்றும் கணவரின் அழைப்பின் பேரில் கூட தீரஜின் மனைவியால் பரத்புராவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் கோபமடைந்த தீரஜ் குமார், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். ரகுநாத்பூரில் தனது முன்னாள் காதலியை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தகவலறிந்த தீரஜின் முதல் மனைவி, துல்ஹான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் கணவர் தீரஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *