நியூசிலாந்து அமைச்சர் கடற்கரையில் உலா வந்ததால் பதவி நீக்கம்

நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க் கொரோனா கட்டுப்பாடு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் மகிழுந்தில் உலா வந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

நியூசிலாந்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.

தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

ஆனால் அவரது பதவி கடிதத்தை பிரதமர் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் பிரதி சுகாதாரத்துறை மந்திரியாக பதவியிறக்கம் செய்யதுள்ளார்.

டேவிட் கிளார்க் செய்த குற்றத்துக்கு அவரை நானே பதவி நீக்கம் செய்திருப்பேன். ஆனால் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அவரது பங்களிப்பு தேவை என்பதால் அவரை பதவியிறக்கம் செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார் நியூசிலாந்துப் பிரதமர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *