மதுபானம் கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் வைத்தியசாலையில்

சென்னை தி.நகர் நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருபவர் பூபதி .இவர் மறைந்த திரைப்பட நடிகை மனோரமாவின் மகன் ஆவார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மதுபான கடை இயங்க அரசு தடை விதித்துள்ளது.

இதனால் மது கிடைக்காமல் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த பூபதி திடீரென்று நேற்று இரவு தூக்கத்திற்காக அதிகளவு தூக்கு மாத்திரை சாப்பிட்டு உள்ளார். பின்னர் இதனால் வலிப்பு ஏற்பட்டதால் உறவினர்கள் இவரை மீட்டு அப்பலோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தியாகராய நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *