இலங்கையில் கொரோனாவால் இறுதியாக உயிரிழந்தவருக்கு வேறு எந்த நோயின் தாக்கம் இருக்கவில்லை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறுதியாக உயிரிழந்த 44 வயது நபர் பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் 23ம் திகதி இத்தாலியில் இருந்து வந்திருந்தார்.
உடனடியாக அவர் வெளிகந்த தனிமைப்படுத்தப்படும் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 26ம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில்மரணமடைந்த அவருக்கு வேறு எந்த நோயின் தாக்கமும் இருக்கவில்லை என்று சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
முன்னதாக கொரோனா வைரஸிற்கு பலியான 4 பேருக்கும் வேறு நோய்களின் தாக்கம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.