இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் களில் இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இருவரில் ஒருவரான சுற்றுலா வழிகாட்டியான ஒருவரும் மற்றுமொருவரின் உடல் நிலையிலேயே முன்னேற்றம் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சுற்றுலா வழிகாட்டியான நபர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வைத்திய பரிசோதனைகளின் பின் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.