வங்கி,நிதிநிறுவன கடன் மீளறவிடலை 6 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
டின் மீனுக்கான விலையும் 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கி,நிதிநிறுவன கடன் மீளறவிடலை 6 மாதத்திற்கு இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையின்பொதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.