துபாய் அனைத்து நாடுகளுக்கும் விசா வழங்குவதை நிறுத்தியது

அனைத்து நாடுகளுக்கும் விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பவர்களை தவிர மற்ற அனைவருக்கும் நுழைவு விசாக்கள் வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது. இது மார்ச் 17 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே விசா பெற்ற நபர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (Federal Authority For Identity and Citizenship), கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முன்னெடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரசை தொற்றுநோயாக அறிவித்ததன் பலனாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் வரும் மார்ச் 17 ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை லெபனான், துருக்கி, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கான பயணங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அந்த நாடுகளிலிருந்து துபாய் வருவதற்கும் துபாயிலிருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதற்கும் உண்டான அனைத்து விமான சேவைகளும் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான இடைநீக்கம் உள்ளது.

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (General Civil Aviation Authority-GCAA) லகின் பெரும்பாலான நாடுகளுக்கு வைரஸ் பரவுவதை வைத்து ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமையை ஆய்வு செய்து அதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் இந்த முடிவானது தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Emergency Crisis and Disaster Management authority-NCEMA) போன்ற நாட்டின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
NCEMA மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து உலகின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்கள் பயண முன்பதிவை மாற்றியமைக்கவும், பாதுகாப்பாக பயணிக்கவும் தாங்கள் முன்பதிவு செய்த விமான நிலையங்களுடன் தொடர்பு கொண்டு விமானத்தின் அப்டேட்டை கேட்டுக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *