இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர்.
மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.