நூறு வயது முதியவருக்கும் இருபது வயது யுவதிக்கும் திருமணம்

இந்தோனேஷியாவில் சுமார் 100 வயது மதிக்கத்தக்க முதியவர் 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தோனேஷியாவில் அதிக வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வது சாதரணமாக பார்க்கப்படுகிறது.
தற்போது 100 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இது குறித்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான அயு அங்கரினி முச்சட்டர் என்பவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவிக்கையில், திருமணம் செய்யும் நபரின் பெயர் கட்டேயோ எனவும் அவருடைய சரியான வயது தெரியவில்லை.
இருப்பினும் அவர் நூறு வயதை அடைந்திருப்பார் என்று நம்புகிறேன். அதே போன்று அவர் திருமணம் செய்துள்ள இண்டோ அலங் -க்கு 20 வயதிற்கு மேல் இருக்கும் எனவும் இருவருக்கும் 80 வயது வித்தியாசம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் திருமணம் வாஜு வில் இருக்கும் மண்மகளின் வீட்டில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காட்டே தன்னுடைய மனைவிக்காக உள்ளூர் மதிப்பில் 5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது
இந்தோனேஷியாவில் இஸ்லாமிய திருமணங்களின் போது மணமகன், மணமகளின் குடும்பத்தினருக்கு செலவு செய்வது, உடைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் கொடுப்பது போன்றவை நடைமுறை என்று கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 16, ஆனால் அங்கு திருமண சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளை வைத்து ஆண்கள் இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *