கருக்கலைப்பு மற்றும் கைவிடப்படும் குழந்தைகளை காப்பாற்ற வருகிறது புதிய சட்டம்

தாயொருவருக்கு தனது  குழந்தை தேவையில்லையெனில் அந்த குழந்தையை அரசாங்கமே பொறுப்பேற்கும் வகையிலான புதிய திட்டமொன்று இலங்கையில் கொண்டுவரப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த குழந்தைகளை பொறுப்பேற்கும் வகையிலான ஒன்பது மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது.
கடந்த சில காலங்களாக நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் பிறந்து சில நாட்களேயான பல சிசுக்களின் மரணங்கள் மற்றும்   அநாதரவாக விடப்படும் பிஞ்சு குழந்தைகளின் எண்ணிக்கைஎன்பவற்றை குறைக்கும் நோக்கத்திலே இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
தவறான உறவின் மூலம் ஏற்படும் கருக்கலைப்பு மற்றும் கைவிடப்படும் பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றவே  குறித்த புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *