4 வருடங்களுக்கு முன் இறந்த மகளை கண்முன் கொண்டுவந்து தொழிநுட்பம்

இறந்த மகளை கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்…!
அனைவரையும் நெகிழவைத்த தருணம்…!
தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது.
இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன் பற்றி கவலையடைந்து பேசினார். அவரிடம் VR மூலமாக மகளைச் சந்திக்கவைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, சிறப்பு கையுறை அணிந்து, விசுவல் ரியாலிற்றி உலகத்திற்குள் நுழைந்து மகளுடன் ஜாங் பேசும் காணொளியை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஜாங், தனது மகளைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இருவருக்குமான நீண்ட உரையாடல் இடம்பெறுகிறது. இறந்த மகளைக் கண்முன்னே பார்ப்பதாக உணர்ந்த ஜாங் உணர்ச்சி மிகுதியில் பாசத்துடன் பேசி அனைவரையும் கலங்க வைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *