2500 ரூபா தண்டப்பனம் செலுத்தாததால் 7 வருட சிறையில் இருந்து சுதந்திர தினத்தில் விடுதலை

மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது.
” மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று..”
நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில்த் தொற்றி ஏறிக் கொண்டேன்.
என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிலிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதணைக்காரர் அந்த சமயம் பார்த்து அங்கே வந்துவிட்டார்.
டிகெட்டைக் கேட்டார்.
டிக்கெட் இல்லாத காரணத்தினால் அடுத்த ஸ்டேஷனுக்கு என்னை ஒப்படைத்தார்.
நிலைமையை எவ்வளவு தெளிவுபடுத்தியும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டப்பணமும் விதித்தார்கள்.

2500/-
கையில் ஒரு சதம் கூட இல்லாத நிலையில் எங்கே பணத்தைத் தேடிச் செலுத்துவது!!??
சிறையில் அடைத்தார்கள்…..
ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்த சுதந்திர தினத்தில் விடுதலை கிடைத்துள்ளது. ஏழு வருடங்களாக எனது மனைவி, மூத்த மகனுக்கு என்ன ஆனதென்று எதுவும் தெரியவில்லை.
சுதந்திர தினம் அழகானது. நான் சென்று வருகின்றேன் ஐயா….

(சிங்கள மொழிமூலப் பதிவிலிர்ந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *