இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பீகார் திரும்பிய 29 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பெண் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஏக்தா குமாரி என்ற பெண் சீனாவில் இருந்து ஜனவரி 22ம் திகதி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள டியான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பீகார் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சஞ்சய் குமார் கூறுகையில், அவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மட்டுமே எழுந்துள்ளது நோய் உறுதி செய்யப்படவில்லை.
அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதால் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் சாப்ராவின் சாடர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருவோருக்கென தனியாக அறையொன்று ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவிலிருந்து மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *