பஸிலுக்கு நஸீர் பாராட்டு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால் அவர்களுக்கு தமது கட்சியின் ஆட்சியில் தீர்வையற்ற வாகன அனுமதிபத்திரங்களை வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்திருப்பது மாகாண சபை உறுப்பினர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அம்சமாகும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நான் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எமது உறுப்பினர்கள பலர் இந்த விடயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பில் நான் மேற்கொண்ட நடவடிக்கையின்போது பலமுறை ஏமாற்றப்பட்டோம். பலமுறை இந்த விடயமாக எமது மாகாண சபை உறுப்பினர்களுடன் நான் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியபோதும் எமக்கு உத்தரவாதங்கள் மட்டுதான் அளிக்கப்பட்டனவே தவிர எதுவும் நடந்தேறவில்லை. அரசியல் சாந்த எல்லோருக்கும் இந்தச் சலுகைளை வழங்கும் அரசு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது வியப்பை அளிக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இதனை அவரது கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

தமது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி அமைக்கும்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாட்டை நான் மனதாரப் பாராட்டி வாழ்த்தி வரவேற்கின்றேன்.

மாகாண சபையின் அங்கத்தவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்படுகின்றனர். இப்பணிக்காக அவர்கள் தமது பயணங்களை மேற்கொள்ளும்போது பெரும் செலவுகளைச் சந்திக்கின்றனர். எனவே, அவர்களுக்கு வாகன வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அவசியமானது. எனினும், நல்லாட்சி அரசு இந்த விடயத்தில் பெரும் தவறிழைத்தது என்பது உண்மையே” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *