‘மன்கட் முறை ஆட்டமிழப்பு’ என்றால் என்ன?

‘மன்கட்’ முறைக்கு அப்படிப் பெயர் வரக் காரணமே ஒரு பழம்பெரும் இந்திய பந்துவீச்சாளர்தான். 1947ல் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டத்தில், வினு மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளர் இதே போன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுனை அவுட் செய்தார்.

அதில் இருந்து இது ‘மன்கட்’ முறை என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் சட்டத்திட்டத்தின்படி, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்குமுன் கிரீஸைவிட்டு வெளியே சென்றால் பந்துவீச்சாளரால் அவுட் செய்ய முடியும்.

கிரிக்கெட் சட்டத்தின்படி இது அவுட்டாக கணக்கில் எடுத்துகொள்ளப்படும் என்றாலும், விளையாட்டின் பொதுப் பண்புக்கு ‘மன்கட்’ எதிராகப் பார்க்கப்படுகிறது. சில கிரிக்கெட் ஜாம்பவான்கள் இதை மலிவான உத்தியாகவும் பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *