கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்

வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை.

இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும்.

கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிம் ஜாங்-உன்னின் இளைய சகோதரியான இவர், மெதுவாக செல்வாக்கு மிக்கவராக உருவாகி வருகிறார்.

வட கொரியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அந்நாட்டை ஆளுவதை சட்டபூர்வமாக்க பயன்படுத்தப்படுகிறது. “இது பொருளில்லாத முறை” என்று சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சீட்டிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு வேட்பாளரின் பெயர்தான் இருக்கும்.

நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் 687 பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமை வட கொரிய ஊடகம் அறிவித்தது.

ஆனால், கிம் ஜாங்-உன்னின் பெயர் அப்போது வாசிக்கப்படவில்லை.

இவரது பெயர் இந்த பட்டியிலில் இல்லாதது, அதிகாரத்தின் பலம் பலவீனமடைந்து விட்டதை காட்டவில்லை என்று வட கொரிய சிறப்பு இணையதளமான என்கே நியூஸின் ஆய்வாளர் ரேச்சலு மின்யெங் லீ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

வட கொரியா அசாதாரணமான நாடு என்பதை பார்க்க செய்வதன் ஒரு பகுதி இதுவென கூறிய அவர், பல ஜனநாயக நாடுகளில் அதிபர் நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியை கொண்டிருப்பவராக இருப்பதில்லை என்றார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற முந்தைய தேர்தலில், வட கொரிய தலைவரின் சகோதரியான கிம் யோ-ஜாங் தேர்வு செய்யப்படவில்லை என்று மின்யெங் லீ விளக்கினார்.

யாரோ ஒருவரது இறப்புக்கு பின்னர் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவர் வட கொரிய நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக உருவானதாக தெரிகிறது என்கிறார் அவர்.

கட்சியின் முக்கிய பரப்புரை மற்றும் கிளர்ச்சி துறையின் துணை இயக்குநராக அமர்த்தப்பட்ட பின்னர், கிம் யோ-ஜாங் 2014ம் ஆண்டிலிருந்து செல்வாக்கில் உயர்ந்துள்ளார்.

தனது சகோதரரோடு மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்போடு நடைபெற்ற சமீபத்திய கூட்டம் உள்பட, கிம் ஜாங்-உன்னின் வெளிநாட்டு பயணங்கள் எல்லாவற்றிலும் இவர் பங்கேற்று வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், வேட்பாளர் பற்றிய தெரிவு இல்லாவிட்டாலும், 17 வயதுக்கு மேலானோர் அனைவருக்கும் கட்டாயமாகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வக்களிப்போர் 100 சதவீதத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.

இதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு அனைவரும் ஒருமித்த ஆதரவை வழங்கியிருப்பர்.

வெளிநாடுகள் மற்றும் கடல் கடந்த நாடுகளில் பணிபுரிவோர் வாக்களிக்க வர முடியாததால், இந்த ஆண்டு 99.99 சதவீதம் பேர் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளதாக செவ்வாய்க்கிழமை வட கொரிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *